தமிழியல் வினா விடைகள்

1) பின்வருவனவற்றுள் பகுபதமாய் வராதது?
1) கலைஞன்
2) ஆடினான்
3) முயற்சி
4) தமிழ்
2) முகில் அனைய கொடைச் செங்கை என்பதில் வந்துள்ள உவமேயம்?
1) கொடை
2) முகில்
3) செங்கை
4) அனைய
3) பெயர் எச்சத் தொடராய் வராதது?
1) மிடிக்கும் கடாக்களிற்றான்
2) ஓடாத தேர்
3) எறிந்த பரிசயம்
4) தளர்ந்து சோர்ந்தாள்
4) பின்வருவனவற்றுள் வியப்புப் பொருள் தரும் வாக்கியம்?
1) "மார்த்தாண்டா, கருணாகரன் மடிந்த இடத்தை எனக்கு காட்டுவாய்
2) தமிழையே சிருஸ்டிக்க இவரென்ன அகத்தியரின் அவதாரமா?
3) அம்மா! ஸ்வாமிக்கு ஒரு நட்சத்திரக் குழந்தை பிறந்து விட்டது.
4) "ஐயோ! விடிகிறதே இன்னிக்கு என்ன வச்சிருக்கோ?"
5) பவளவாய் முத்துப்பல் தெரியச் சிரித்தாள். பவளவாய் என்பது?
1) உவமைத்தொகை
2) அன்மொழித்தொகை
3) பண்புத்தொகை
4) உம்மைத்தொகை
6) அக்கல்லூரி தனது ஐம்பதாண்டு முடிவிலே ________ கொண்டாடப்பட்டது.?
1) வெள்ளிவிழா
2) பொன்விழா
3) வைரவிழா
4) முத்துவிழா
7) கமலப்பள்ளி மேய வகையில் துஞ்சும் வெள்ளை யன்னம் காணாய்-துஞ்சுதல் என்பதன் ஒத்த சொல்?
1) தாலாட்டுதல்
2) தூங்குதல்
3) மேய்தல்
4) இரங்குதல்
8) அவருக்குக் கிராமத்தில் மூன்று கோவில்களை பராமரிக்கும் பிராப்தம். பிராப்தம் என்பதன் ஒத்த சொல்?
1) பழவினைப் பயன்
2) கடமை
3) பாவம்
4) புண்ணியம்
9) குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணம். பிராணன் என்பதன் ஒத்த சொல்?
1) உயிர்
2) விருப்பம்
3) ஆசை
4) அழகு
10) “கூடல், கூடல், கூடல், கூடிப்பின்னே குமரன் போயின் வாடல் வாடல்என்று பாடினான் பாரதி. கூடல்என்பதன் எதிர்ச் சொல் ?
1) ஊடல்
2) தேடல்
3) நாடல்
4) வாடல்
தேர்வு