விடுகதை வினா விடைகள்

1) குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன?
1) குதிரை
2) ஊசி நூல்
3) தும்பி
4) நாய்
2) பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன?
1) இலவம்பஞ்சு
2) விளாம்பழம்
3) முந்திரி
4) பப்பாளி
3) எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?
1) புத்திசாலி
2) வித்தகன்
3) அறிஞன்
4) கோமாளி
4) ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான். அவன் யார்?
1) கழுதை
2) யானை
3) சிங்கம்
4) புலி
5) அடிப்பக்கம் மத்தளம், இலை பர்வதம், குலை பெரிது, காய் துவர்ப்பு, பழம் தித்திப்பு. அது என்ன?
1) மாமரம்
2) வாழைமரம்
3) பலாமரம்
4) மாதுளை
6) ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே கூட்டுவான். அவன் யார்?
1) காகம்
2) நாய்
3) புறா
4) பூனை
7) எங்க வீட்டுத் தோட்டத்திலே தொங்குதே ஏகப்பட்ட பச்சைப் பாம்புகள். அது என்ன?
1) மிளகாய்
2) பாகற்காய்
3) புடலங்காய்
4) கத்தரிகாய்
8) "உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்" அது என்ன?
1) நரகம்
2) பிரம்பு
3) தராசு
4) காவல்காரன்
9) "ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்?
1) மனிதர்கள்
2) யானைக் கூட்டம்
3) எறும்புக் கூட்டம்
4) மான் கூட்டம்
10) "உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்" நான் யார்??
1) கழுதை
2) அஞ்சல் பெட்டி
3) குதிரை
4) மாடு
தேர்வு