விடுகதை வினா விடைகள்

1) கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
1) வெங்காயம்
2) தோடம்பழம்
3) கரும்பு
4) தேசிக்காய்
2) உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
1) நீர்
2) இளநீர்
3) கடல்
4) மாம்பழம்
3) வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
1) ரோஜாபூ
2) மல்லிகைப்பூ
3) பூ
4) சிரிப்பு
4) எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
1) மீன்
2) சிலந்தி
3) நண்டு
4) வாத்து
5) ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
1) கண்ணீர்
2) அருவி
3) ஆறு
4) கிணறு
6) கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
1) நெருப்பு
2) விளக்கு
3) மெழுகுதிரி
4) அனல்
7) ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
1) பற்கள்
2) பூக்கொத்து
3) மாதுளம்பழம்
4) மாம்பழம்
8) வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது?
1) மான்
2) முட்டை
3) மீன்
4) கண்
9) மருத்துவர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு அவர் யார்?
1) இலையான்
2) நுளம்பு
3) மான்
4) சிங்கம்
10) ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்?
1) நாய்
2) செருப்பு
3) பூனை
4) அட்டை
தேர்வு