தமிழியல் வினா விடைகள்

1) வறியவர்களுக்கும் வலது குறைந்தோருக்கும் முதியோருக்கும் உண்டியும் உறையுளும் கொடுத்து ஆதரிப்போருக்காக ________ அமைக்கப்பட்டுள்ளது?
1) அன்னசாலைகள்
2) ஆதுலர்சாலைகள்
3) ஆச்சிரமம்
4) பாசறைகள்
2) தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் ________ சூடுபிடித்துள்ளது?
1) வின்னபனம்
2) பிரசுரம்
3) பிரசாரம்
4) வாக்குமூலம்
3) வகுப்பறை ________ மூலம் மாணவரது பாட அடைவு மட்டத்தை அறிந்து கொள்ளலாம்?
1) ஒதுக்கீடு
2) கணிப்பீடு
3) உள்ளீடு
4) தலையீடு
4) பொருத்தமான வைப்பு முறையை தெரிவு செய்க (அ) பழமொழிகளை யார் எப்பொழுது இயற்றினார் என்று சொல்ல முடியாது (ஆ) அவை அவ்வவ்போதைய தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து விட்டு மறைந்து போகின்றது (இ) அத்தகைய வாக்கியங்களே பழமொழிகள் (ஈ) நாம் நாள்தோறும் பேசும் வாக்கியங்கள் அவ்வவ்போது எம்மால் அமைக்கப்படுவன (உ) எனினும் சிற்சில வாக்கியங்கள் பொருட்சிறப்பு மிக்கவையாக பிறந்து மீண்டும் மீண்டும் எடுத்து காட்டும் தகுதியை பெற்று விடுகின்றன?
1) ஈ,ஆ,உ,இ,அ
2) ஆ,உ,இ,ஆ,ஈ
3) இ,ஈ,அ,உ,ஆ
4) அ,ஆ,உ,ஈ,இ
தேர்வு