தமிழியல் வினா விடைகள்

1) செம்மொழியாம் தமிழ் மொழி மாந்தர்களால் மாத்திரமன்றி?
1) பிறரும் விரும்புகின்றார்கள்
2) பிறர் விரும்பிகின்றார்கள்
3) பிறரால் விரும்பப்படுகின்றது
4) பிறராலும் விரும்பப்படுகின்றது.
2) நீயும் நானும் அவனும் பல விடயங்களில்?
1) ஒத்திருக்கின்றனர்
2) ஒத்திருக்கின்றீர்
3) ஒத்திருக்கின்றோம்
4) ஒத்திருக்கின்றிர்கள்
3) நாட்டார் பாடல்களில் இடம்பெறும் உவமை உருவகங்கள் வாழ்க்கையோடு?
1) தொடர்புள்ளதாக காணப்படுகின்றன
2) தொடர்புள்ளதாக காணப்படுகின்றது
3) தொடர்புள்ளனவாக காணப்படுகின்றது
4) தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன
4) பின்வர்வனவ்றுள் சரியாக எழுத்து கூட்டப்பட்ட சொல்வரிசையை தெரிவு செய்க?
1) தேர்ச்சி, ஆராட்சி, தளர்ச்சி, இகழ்ச்சி
2) உடைமை, கயமை, தகமை, பகைமை
3) உற்சவம், நிச்சயம், முகூர்த்தம், நாகரிகம்
4) கட்சி, ஆட்சி, மீட்ச்சி, மாட்சி
5) இளைப்பாறிய அரசாங்கம் உத்தியோத்தருக்கு அவர் ஆற்றிய சேவைக்காக மாதம் மாதம் ________ வழங்கப்படும்?
1) ஓய்வூதியம்
2) மானியம்
3) வேதனம்
4) சன்மானம்
6) ஒரு வெளியை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவேற்றி தருவதாக ஒருவருக்கு ________ அளித்தல் அதனை மீறக்கூடாது?
1) ஒப்பந்தம்
2) ஒப்படை
3) உச்சவரம்பு
4) உத்தரவாதம்
7) போதைவஸ்துக்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி இளைஞர் மத்தியில் ________ மேற்கொள்ளப்படல் வேண்டும்?
1) பிரசுரம்
2) பிரசாரம்
3) பிரகாரம்
4) பிரகடனம்
8) பந்தியை அமைக்குக (அ) காவலாளரை கவனிக்குமாறு என்னை பணித்திருக்கின்றார் (ஆ) அது அரசரின் கட்டளையாகும் (இ) அரண்மனைத் தோப்பிலுள்ள மரங்களில் யாரும் பலன்களை பறிக்க கூடாது (ஈ) தோப்புக்கு காவலாகவும் சிலரை அவர் போட்டிருக்கின்றார் (உ) பறித்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்?
1) இ,ஆ,ஈ,உ,அ
2) ஈ,அ,ஆ,உ,இ
3) இ,ஈ,உ,அ,ஆ
4) இ,உ,ஆ,ஈ,அ
9) மின்னும் தார் வீமன் தான் மெய்ம் மரபு – இங்கு தார் என்பதன் பொருள்?
1) மலர்
2) கருமை
3) மாலை
4) முடி
10) மல்லல் மறுகில் மட நாகுடனாக செல்லும் மழவிடை – நாகு என்பதன் ஒத்த கருத்து சொல்?
1) பசு
2) எருது
3) காளை
4) ஆடு
தேர்வு