தமிழியல் வினா விடைகள்

1) மரவேர் என்பது?
1) தோன்றல் விகாரம்
2) திரிதல் விகாரம்
3) கெடுதல் விகாரம்
4) இயல்பு புணர்ச்சி
2) விண் இயங்கும் ஞாயிறைக் கை மறைப்பார் இல் – இங்கு ஞாயிறு என்பதன் பொருள்?
1) கிழமை
2) நாள்
3) சூரியன்
4) பகல்
3) வெற்றி வேலோ உனது நயனங்கள் – நயனங்கள் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1) புருவங்கள்
2) கண்கள்
3) இதழ்கள்
4) பற்கள்
4) ஆழிவாய் சத்தம் அடங்காதோ – இங்கு ஆழி என்பதன் ஒத்தகருத்து சொல்?
1) கடல்
2) சக்கரம்
3) காற்று
4) அகழி
5) வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று உபசாரம் செய்தல் நல்ல பழக்கமாகும் – உபசாரம் என்பதன் எதிர்பொருள் சொல்?
1) அபசாரம்
2) அவமானம்
3) அபகாரம்
4) விவகாரம்
6) சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை சிலரால் ஆட்சேபிக்கப்பட்டது. இங்கு ஆட்சேபித்தல் என்பதன் எதிர்கருத்து சொல்?
1) நிராகரித்தல்
2) ஆமோதித்தல்
3) பிரேரித்தல்
4) அமுலாக்குதல்
7) உண்மைய உறுதிபடுத்தாமலே ஊர் மக்கள் பரப்பும் ஐயத்துக்கிடமான செய்தி?
1) அறிவிப்பு
2) புகார்
3) வதந்தி
4) அறிவித்தல்
8) வயலும் வயல் சார்ந்த நிலமும்?
1) முல்லை
2) குறிஞ்சி
3) நெய்தல்
4) மருதம்
9) பின்வருவனவற்றுள் பிரெஞ்சு மொழிச் சொல்லாக அமைவது?
1) கடுதாசி
2) துட்டு
3) துருப்பு
4) பென்சில்
10) கிடைத்தற்கரிய நூதனமான பொருட்கள் மியூஸியத்தில் வைக்கப்பட்டுள்ளன. மியுசியம் என்ற சொல்லின் தமிழ் சொல்?
1) அருங்காட்சியகம்
2) புகலரண்
3) சுவடிகள் கூடம்
4) காட்டரன்
தேர்வு