தமிழியல் வினா விடைகள்

1) ‘‘மரக் கொம்பர்களில் வாழாமல் இங்கு வந்த காரணம் என்னவோ? ” இங்கு கொம்பர் என்பதன் ஒத்தசொல்.?
1) பொந்து
2) கிளை
3) கூடு
4) நிழல்
2) செல்வம் நிறைந்த பேதையர் நிலத்திற்குச் சுமையாவர். இங்கு பேதையர் என்பதன் எதிர்ச்சொல்.?
1) அறிவாளி
2) வறியவர்
3) அறிவிலிகள்
4) சித்தப்பிரமைபிடித்தவர்
3) பாணன் பாடிப் பரிசு பெற்றான் இதில் பாணன் என்பதன் எதிர்ப்பாற் சொல்?
1) பாடினி
2) பாலகி
3) பாடகி
4) பாங்கி
4) உண்மையை உறுதிப்படுத்தாமலே ஊர்மக்கள் பரப்பும் செய்தி.?
1) அறிவித்தல்
2) புகார்
3) அறிவுறுத்தல்
4) வதந்தி
5) மாவின் இளம் பிஞ்சு வடு, பலாவின் இளம்பிஞ்சு?
1) கச்சல்
2) நுங்கு
3) மூசு
4) குரும்பை
6) மக்கள் வங்கி தனது அறுபதாவது நினைவு விழாவைக் கொண்டாடியது. இவ்விழா?
1) பொன் விழா
2) வைரவிழா
3) மணிவிழா
4) அமுதவிழா
7) மிடி, நல்குரவு, வறுமை என்பன குறிக்கும் பொருள்?
1) துன்பம்
2) இழுக்கு
3) தரித்திரம்
4) கொடுமை
8) வண்டு, அன்பு, மது, குளிர்ச்சி ஆகிய பல பொருள்கள் உணர்த்தும் ஒரு சொல்?
1) அளி
2) கீதம்
3) களி
4) நறவம்
9) வறுமை, செல்வம், இரண்டினையும் ஒன்றாகக் கருதும் பற்றற்ற நிலையை உணர்த்தும் அருஞ் சொற்றொடர்?
1) ஏழை எளியவர் வாயிலடியாமல் இருத்தல்
2) தனக்கென வாழாப் பிறர்க்குரியவனாதல்
3) ஓடும் செம் பொன்னும் ஒக்கவே நோக்குதல்
4) குற்றங்களைந்து குணங் கொள்ளல்
10) பின்வருவனவற்றுள் போர்த்துக்கேய மொழிச் சொற்கள் கொண்ட தொகுதி.?
1) குசினி, பீரோ, பட்டாளம்
2) கந்தோர், கேத்தல், சாக்கு
3) விகாரை, பிக்கு, துக்கம்
4) கடதாசி, சப்பாத்து, வாங்கு
தேர்வு