தமிழியல் வினா விடைகள்

1) இன்று கல்வி குளோபலைசேஷன் (புடழடியடணையவழைn) மயமாகி விட்டது. குளோபலைசேஷன் என்பதன் தமிழ் வடிவம்.?
1) கரமயமாக்கல்
2) பூகோளமயமாக்கல்
3) தொகை மதிப்பு
4) வெகுசனப் பண்பாடு
2) எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன?
1) ஐம்பால்
2) ஐந்திணை
3) ஐந்திலக்கணம்
4) ஐம்பொறி
3) அல்லும் பகலும் என்பது?
1) அடுக்கு மொழி
2) இணைமொழி
3) இரட்டைக் கிளவி
4) அடுக்கிடுக்குமொழி
4) மாமியார் இறந்தமைக்காக கமலா முதலைக் கண்ணீர் வடித்தாள். முதலைக் கண்ணீர் என்ற மரபுத் தொடரின் பொருள்?
1) இரந்து வேண்டல்
2) அதீத கவலை
3) துன்பந்தரும் ஒன்றைச் சகித்துக் கொண்டிருத்தல்
4) பொய் இரக்கம்
5) ஏழை விவசாயி அரும் பாடுபட்டு வாழ்ந்தான். அரும்பாடு பட்டு வாழுதல் என்ற கருத்தைத் தரும் மரபுத் தொடர்?
1) வாய்திறத்தல்
2) வயிறு கழுவுதல்
3) பல்லுக் கடித்தல்
4) வயிற்றிலடித்தல்
6) சேற்றில் புதைந்த யானையைக் காடுமுங் குட்டும் என்ற பழமொழி தரும் உட்கருத்து.?
1) உயர்ந்த நிலையில் இருந்த ஒருவர் தன்னிலை தாழும் போது மிக எளியவரும் அவரைத் துன்புறுத்துவர்.
2) தந்திரமுள்ள காக்கையால் வலிமையுடைய யானையையும் வெல்ல முடியும்.
3) ஆனையானாலும் அடி சறுக்கும்
4) ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்
7) செய்த தவறை மீண்டும் செய்யாதிருக்க ஒரு முறை ஏற்பட்ட அனுபவம் உதவும் என்பதை விளக்கும் பழமொழி?
1) தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
2) துள்ளின மாடு பொதி சுமக்கும்
3) நுணலும் தன் வாயால் கெடும்
4) சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.
8) பக்கம் சாராது நடுவுநிலையோடு காரியமாற்றலை விளக்கப் பொருத்தமான உவமைத் தொடர்?
1) சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல
2) தாரகை நடுவண் தண் மதிபோல
3) அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல
4) புனலோடும் வழி புல்சாய்தல் போல
9) பன்மையில் வழங்காத ஒரு சொல்?
1) நாள்
2) மழை
3) காலம்
4) பயன்
10) பகுபத உறுப்புக்கள் ஆறும் கொண்டு அமைந்த சொல்.?
1) படித்தான்
2) நடந்தான்
3) அலைந்தான்
4) குளத்துமீன்
தேர்வு