தமிழியல் வினா விடைகள்

1) முன்பின் சிந்திக்காமல் செயற்படுவதைக் குறிக்கும் இணைமொழி ?
1) எடுத்தஎடுப்பில்
2) கோணல்மாணல்
3) இடக்குமுடக்கு
4) அரக்கப்பறக்க
2) அற்புதம் எனும் வடமொழிச்சொல்லின் பொருள்?
1) புதுமை
2) ஆச்சரியம்
3) இசைவு
4) வியப்பு
3) மீனவச் சமூகத்தில் இருள் சூழ்ந்த மாலை நேரத்தைக் குறிக்கும் சொல் ?
1) செக்கல்
2) வெள்ளிடி
3) அம்மாறு
4) கொண்டல்
4) மிகுந்த கர்வம் கொள்ளுதல், பெருமுயற்சி எடுத்தல் ஆகிய இரு பொருள்களையும் குறிக்கும் மரபுத்தொடர்?
1) தலைகீழாய் நிற்றல்
2) தலைகீழாய் நடத்தல்
3) தலை தடுமாறுதல்
4) தலைக் கட்டுதல்
5) இலக்கிய உலகில் காலஞ் சென்ற பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் பெயர் பொறித்துள்ளார். பெயர் பொறித்தல் எனும் மரபுத் தொடரின் பொருள் ?
1) தாபித்தல்
2) பாதுகாத்தல்
3) புகழைநிலைநாட்டல்
4) நிரம்பக்கற்றல்
6) இரட்டை வேடம் போடுதல் எனும் பொருள் தரும் உவமைத் தொடர் ?
1) குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுதல் போல
2) தவித்த முயல் அடிப்பதைப் போல
3) திரிசங்கு சுவர்க்கம் போல
4) இரண்டு தோணியில் கால் வைத்தல் போல
7) துன்பம் வந்தால் அடுத்தடுத்து வரும் எனும் பொருள் தரும் பழமொழி ?
1) துள்ளிய மாடு பொதி சுமக்கும்
2) பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்
3) பால் கேட்ட பிள்ளைக்கு பனைவட்டைக்காட்டுவதோ ?
4) தலைக்கு மேலே வெள்ளம் சாணேறியென்ன முழமேறியென்ன?
8) கூர் மதியினரும் கூட மனந்திளைத்து நின்றனர் என்ற வாக்கியத்தில் வந்துள்ள சொற்கள்?
1) பெயர் ,வினை ,இடை , உரி எனும் நால்வகையின.
2) பெயர், வினை, உரி எனும் மூவகையின
3) பெயர், வினை, இடைஎனும் மூவகையின
4) பெயரும் வினையும் என இருவகையின
9) கடைப் போலியாய் வருவது?
1) நிலம்
2) பந்தல்
3) அறம்
4) நிலன்
10) பகுபதத்தில் வரக்கூடிய குறைந்த உறுப்புக்கள் ?
1) பகுதி, இடைநிலை
2) பகுதி, விகுதி
3) பகுதி, சாரியை
4) இடைநிலை, விகுதி
தேர்வு