தமிழியல் வினா விடைகள்

1) உவமைத் தொகையாயும், வினைத்தொகையாயும் வரக்கூடியது ?
1) மதிமுகம்
2) பாலாடை
3) கண்மணி
4) அஞ்சுமுகம்
2) செங்கோன்மை என்பது?
1) பண்புத்தொகை
2) வினைத்தொகை
3) உவமைத்தொகை
4) அன்மொழித்தொகை
3) தரப்பட்ட சொல் வகைக்குப் பொருந்தாத ஒரு சொல் இடம்பெறும் வரிசை ?
1) காரணப்பெயர் - அணி, விளக்கு, வளையல்
2) பொதுப்பெயர் -மரம், பழம், நாடு
3) சிறப்புப்பெயர் - தமிழரசி, பொன்னி, கலைமகள்
4) இடுகுறிப்பெயர் -மண், மரம், விசிறி
4) நீயும் நானும் அவனும் வந்தோம் - இவ்வாக்கியத்தின் எழுவாய் ?
1) நீ
2) நான்
3) அவன்
4) நீயும் நானும் அவனும்
5) "நகை நலம் நட்டார் கண்நந்துஞ்"இப்பாடலடியில் இடம் பெற்றுள்ள சொல்லணி?
1) உவகை
2) எதுகை
3) மோனை
4) சிலேடை
6) கருணாகரன் மடிந்த இடத்தை எனக்குக் காட்டுவாய். இவ்வாக்கியம்?
1) வினா வாக்கியம்
2) ஏவல் வாக்கியம்
3) கூற்று வாக்கியம்
4) வியங்கோள் வாக்கியம்
7) ரமேஸ் ஒழுங்காகப் படிப்பதில்லை அவனைத் தண்டிக்கலாமா??
1) ஆயினும்
2) ஆனாலும்
3) எனினும்
4) என்றால்
8) நீ உண்மையைச் சொல்லியிருந்தால் உனக்குத் தண்டனை ?
1) கிடைத்திருக்காது
2) கிடைக்கும்
3) கிடைத்தது
4) கிடைக்காது
9) பயிர்ச் செய்கைக்குப் பெற்ற நிலத்துக்காக நிலச் சொந்தக்காரர்களுக்குக் கொடுப்பது ?
1) வட்டி
2) ஆவணம்
3) ஒற்றி
4) குத்தகை
10) நாளைக்கு உன்னைச் சந்தித்தால் நான் அப்புத்தகத்தை?
1) தருவேன்
2) தந்தேன்
3) தருகின்றேன்
4) தந்திருப்பேன்
தேர்வு